ரசவாதி கதைச்சுருக்கம்
எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையையும் வணங்கி போற்றுவோம்.
இன்றுவரை என் மனதில் மாபெரும் தாக்கத்தையூம் செல்வாக்கையும் செலுத்துகின்ற படைப்பு என்றால் பௌலோ கொய்லோ எழுதிய ரசவாதி (the Alchemist). இக்கதை நமது கனவுகளையும், இலக்கையும் அடைவது எவ்வாறு என்பது குறித்தது. சிந்தனையை தூண்டும் பல சங்கதிகள் இந்நாவலில் நெடுக காணப்படுகின்றன. ஆனால், அவை போதிக்கப்படாத பூடக வடிவில் மறைமுகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளன என்பது இந்நாவலின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.
இந்த ரசவாதி 1988ல் பௌலோ கொய்லோ அவர்களால் அவரது தாய்நாடான பிரேசிலில் தமது தாய்மொழியான போர்ச்சுகீஸில் வெளியானது. அப்போது இது போதுமான வரவேற்பைப் பெறாமலும் யாராலும் கண்டுகொள்ளப்படாததாகவும் இருந்தது. இந்நூலைப் பிரசுரித்த பதிப்பகத்தார்,பௌலோ கொய்லாவுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டனர். அதன்பின், வேறு ஒரு பதிப்பகத்தார் ஒரு வாய்ப்புக் கொடுத்து வெளியிட இந்நாவல் வருட நெடுகிலும் பல்லாயிரக் கணக்கான அளவில் விற்பனை ஆகியது. அதன் பின், அமெரிக்க வாசகர்கள் படிக்கும் முகமாக ரசவாதியைக் கொணர ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகம் ஒப்புக்கொண்டு வெகு கோலாகலமாக வெளியிட்டது. அமெரிக்க அதிபரான பில் கிளிண்டன், பிரபலமான மடோனா உள்ளிட்ட பலரும் விரும்பிய புத்தகமாக புகழுக்குரியதாக ரசவாதி பெருத்த வரவேற்பைப் பெற்றது.
இத்தகைய சிறப்பும் புகழும் வாய்ந்த இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை அடியேன், திரு. சின்னத்தம்பி முருகேசன் மற்றும் திருமதி நாகலட்சுமி சண்முகம் ஆகியோரது வாயிலாகப் படித்தேன். யப்பா..! இன்றுவரை ஏன் என் எதிர்காலம் வரை இந்நூல் தன் செல்வாக்கையும் தாக்கத்தையும் செலுத்திக் கொண்டேயிருக்கும். சரி, இந்நூலின் கதையும் அது உணர்த்த விழையும் வாழ்வியல் நுட்பமும்தான் என்ன?!!
★★★சிறந்த நாவல்களில் ஒன்றாக உலகில் விளங்கும் ரசவாதி கதைச்சுருக்கம்★★★ என்னும் தலைப்பில் அடுத்த பதிவில் பார்ப்போம். சிவம் போற்றி! சிவபதம் போற்றி!!
அன்புடன், கம்கோ சித்தர்
Comments
Post a Comment