Skip to main content

Posts

Featured

ரசவாதி கதைச்சுருக்கமும் நுட்பமும் - 2

ஆட்டிடையனாகிய அவன் பெயர் சந்தியாகு. ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்தவன்.அவனுடைய தந்தை, அவன் கிறிஸ்துவ பாதிரியாராக மாற வேண்டும் என்று விரும்பினார். ஆனால், சந்தியாகு உலகின் பல பக்கங்களுக்கும் பயணம் செல்ல விரும்பினான். தந்தையும் அவன் விருப்பத்தை அறிந்து கொண்டு  அவன் போக்கிலேயே விட்டுவிட்டார். பழைய ஸ்பானிய பொற்காசுகள் மூன்றை  முன்பு என்றோ  ஒருநாள் தான் வயல்வெளியில் கண்டெடுத்ததாக கூறி அவற்றை சீதனமாக ஒரு பையில் போட்டு  அவனிடம் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு சந்தியாகு ஆட்டிடையனாக தனது பயணத்தை தொடங்குகிறான்.   அவன் ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் தங்குகின்றான். அன்றைய இரவு ஒரு கனவு இரண்டாவது முறையாக அவனுக்கு வருகிறது. திரும்பத் திரும்ப வரும் அந்த கனவை பற்றி அவன் யோசிக்கிறான். முடிவு பெறாத அல்லது முடிவு தெரியாத கனவு அது.   அது குறித்து கனவுகளுக்கு பலன் சொல்லும் ஒரு சூனியக்கார குறத்தியை சந்திக்கிறான்.   தான் ஒரு புல்வெளியில் இருந்தது போலவும் அப்போது ஒரு சிறுமி அங்கு தோன்றி செம்மறியாடுகளுடன் விளையாடுவது போலவும், திடீரென்று...

Latest posts

ரசவாதி கதைச்சுருக்கமும் நுட்பமும் -1

ரசவாதி கதைச்சுருக்கம்